எம்பிலிபிட்டிய, பனாமுர காவல்துறை பிரிவுக்குட்பட்ட கெம்பனே, அளுத்பர பிரதேசத்தில், மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த 50 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் நேற்று (11-01-2023) காலை 8.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
50 வயதான ராஜா தயானந்த என்ற விவசாயி தனது பிள்ளையை பாடசாலையில் விட்டுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த போது துப்பாக்கியால் சுடப்பட்டுள்ளார்.
இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் கெம்பனே அலுத் வீதி பகுதியில் பாழடைந்த இரண்டு வீடுகளுக்கு அருகிலுள்ள வளைவில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வரும் பனாமுர பொலிஸார், துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்ட சந்தேக நபரைக் கண்டுபிடிப்பதற்கான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.