இம்மாதம் முதல் செலவு அடிப்படையிலான மின்சார கட்டணத்தை நடைமுறைப்படுத்த அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
மின்சாரத் துறைக்கான பொதுக் கொள்கை வழிகாட்டு நெறிமுறைகளைத் திருத்துவதற்கும் அங்கீகாரம் கிடைத்துள்ளதாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
மின் கட்டணத்தை அதிக சதவீதத்தினால் அதிகரிப்பதற்கான யோசனை கடந்த வாரம் அமைச்சர் கஞ்சன விஜேசேகரவினால் அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டது.
இந்த முன்மொழிவு மக்களிடையே கடும் அதிருப்தியை சந்தித்தது.
மின்கட்டண அதிகரிப்புக்கு எதிராக 69 இலட்சம் பேரின் கையொப்பத்துடன் கூடிய பொது மனுவொன்றுக்கான முதற்கட்ட கையொப்பம் நேற்று (09) மின்சார பாவனையாளர்கள் சங்கத்தினால் பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் கையளிக்கப்பட்டது.
மின் கட்டணத்தை அதிகரிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கினாலும் அது நடைமுறைப்படுத்தப்படாது என ஆணைக்குழுவின் தலைவர் ஜானக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.