தலவாக்கலை நகரிலுள்ள கோவிலுக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஓட்டோ ஒன்றிலிருந்து கைவிடப்பட்ட நிலையில் சிசு ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக்க பொலிஸார் கூறியுள்ளனர்.
பிறந்து 12 நாட்களே ஆன குறித்த சிசுவை தலவாக்கலை பொலிஸார் மீட்டு, இன்று (9) காலை லிந்துலை பிரதேச வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.
சிசுவின் அழுகுரல்
இன்று அதிகாலை 5.45 மணியளவில் நிறுத்தப்பட்டிருந்த ஓட்டோவில் சிசுவின் அழுகுரல் கேட்பதாக கிடைத்த தகவலுக்கமைய, பொலிஸாரால் குறித்த சிசு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அதன் பின்னர் அந்த சிசுவுக்கு தலவாக்கலை பொலிஸ் நிலையத்திலுள்ள பெண் கான்ஸ்டபிள் ஒருவரால் தாய்ப்பால் ஊட்டப்பட்டு, லிந்துலை வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் குழந்தை பிறந்து 12 நாட்களே ஆகியிருப்பதாக தெரிவித்துள்ள லிந்துலை வைத்தியசாலையின் வைத்தியர் ஒருவர், சிசு தற்போது குழந்தை நலமுடன் இருப்பதாக தெரிவித்துள்ளார்