மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் புது முயற்சிகளை மேற்கொள்வீர்கள். தொட்டதெல்லாம் பொன்னாகும் இனிய நாளாக இருக்கிறது. சுபகாரிய முயற்சிகளில் இருந்து வந்த மந்த நிலை மாறும். தொழில் விருத்தி உண்டாகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு தன்னம்பிக்கை தளர வாய்ப்பு உண்டு கவனம் வேண்டும்.
ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் யோகம் தரும் அமைப்பாக இருப்பதால் நீங்கள் உங்களுடைய திறமைகளை நிரூபிக்க வாய்ப்புகள் கிடைக்கும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகளை கட்டுப்படுத்த கூடிய சூழ்நிலை இருக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேலதிகாரிகள் ஆதரவு கிடைக்கும்.
மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் நினைத்ததை சாதித்து காட்டும் வாய்ப்பு கிடைக்கும். கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் நெருக்கம் அதிகரிக்கும். சுய தொழிலில் உள்ளவர்கள் சமயோசிதமாக செயல்பட்டு வெற்றிகளை பெறுவீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்கள் மற்றவர்களை தாழ்த்தி பேச வேண்டாம்.
கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய சுய உழைப்பு லாபம் தரும். கடமையிலிருந்து பின்வாங்காதீர்கள். குடும்ப பொறுப்புகளை ஏற்றுக் கொள்ளுங்கள். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு சக ஊழியர்களின் மூலம் அனுகூலமான பலன்கள் உண்டாகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மன மாற்றம் ஏற்படலாம்.
சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் புதிய விஷயங்களில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். உங்களுடைய நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும் வாய்ப்பு உண்டு. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு லாபம் எதிர்பார்த்து அளவிற்கு இருக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் தங்கள் திறமைகளை நிரூபிக்க போராட வேண்டி இருக்கும்.
கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய நீண்ட நாள் உழைப்பு பலிதம் ஆகும் அமைப்பாக இருக்கிறது. விட்டு சென்ற உறவுகள் தானே தேடி வரும் யோகம் உண்டு. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு கொடுக்கல் வாங்கல் பிரச்சனைகள் மேலோங்கி காணப்படும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் எதையும் தைரியமாக எதிர்கொள்ளுங்கள்
துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சோதனைகள் நிறைந்த நாளாக இருக்கப் போகிறது. பல தடைகளை தாண்டிய முன்னேற்றம் இருக்கும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு நண்பர்களின் உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் தங்களுடைய தனித்திறமைகளை மென்மேலும் மெருகேற்றிக் கொள்ள முயற்சி செய்வார்கள்.
விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அனுகூலம் தரும் நல்ல அமைப்பாக இருக்கிறது. கணவன் மனைவி ஒற்றுமையில் விரிசல் விழலாம் கவனமுடன் இருப்பது நல்லது. சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். சுய தொழிலில் எதிர்பார்க்காத மாற்றம் ஏற்படும். உத்தியோகஸ்தர்கள் அனாவசிய செலவுகளை கட்டுப்படுத்துவது நல்லது.
தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நலம் தரும் நல்ல நாளாக இருக்கிறது. நீங்கள் இதுவரை சந்தித்து வந்திருந்த மிகப்பெரிய பிரச்சனைகளில் இருந்து விடுபட போகிறீர்கள். சுய தொழிலில் எதிர்பாராத அதிர்ஷ்டம் வந்து சேரப் போகிறது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்க வாய்ப்பு உண்டு.
மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சாதகமற்ற அமைப்பு என்பதால் எதிர்பார்ப்புகள் தடைபடுவதற்கு வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் தேவையற்றவர்களை நம்பி புதிய பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். சுய தொழிலில் எதிர்பார்த்த லாபம் காண முழு முயற்சியோடு ஈடுபடுவீர்கள். ஆரோக்கியம் சீராகும்.
கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் உங்களின் கருத்துகளை முன் வைப்பதில் கவனமாக இருப்பது நல்லது. புதிய தொழில் துவங்கும் எண்ணம் மேலோங்கி வரக்கூடும். சுய தொழில் செய்பவர்கள் தேவையற்ற பகையை வளர்க்க வேண்டாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நிம்மதி இருக்கும்.
மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் இனிய பலன் தரும் அமைப்பாக இருக்கிறது. நீங்கள் தொட்டதெல்லாம் துலங்கும். இழுபறியில் இருந்த முயற்சிகளுக்கு விடை கிடைக்கும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு பயணங்கள் மூலம் லாபம் உண்டாகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும்