ரயில்வே திணைக்களத்தின் பல்வேறு தரங்களுக்கும் விரைவாக ஆட்சேர்ப்பு மேற்கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி 100 ரயில் சாரதிகள் கட்டுப்பாட்டாளர்கள் மற்றும் நிலைய பொறுப்பதிகாரிகள் ஆகியோர் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்கு மேலதிகமாக 3,000 கனிஷ்ட ஊழியர்களும் உடனடியாக இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர்.
அரசாங்கத்தின் ஒரு இலட்சம் வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களில் இருந்து இவர்கள் தெரிவு செய்யப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.