இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இரண்டு வகையான எரிபொருட்களின் விலையை குறைக்க இலங்கை பெற்றோலியம் கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது.
இதன்படி, ஒட்டோ டீசலின் விலை 15 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.
அத்துடன் மண்ணெண்ணெய் விலையை 10 ரூபாவினால் குறைக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் புதிய விலை 405 ரூபாவாகவும் மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் புதிய விலை 355 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் விலை குறைப்பிற்கு அமைய லங்கா ஐஓசி நிறுவனமும் தமது ஒட்டோ டீசலின் விலையை 15 ரூபாவால் குறைக்க தீர்மானித்துள்ளது.