கம்பஹாவில் தாயினால் விஷம் கொடுக்கப்பட்ட , ஐந்து வயதான சிறுவன் இன்று காலை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கொழும்பு சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் குறித்த சிறுவன் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கம்பஹா, நால்ல – லோலுகொட பிரதேசத்தில் வசிக்கும் சிறுவன் ஒருவருக்கு இந்த துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது.
தாயும் மற்றுமொரு பிள்ளையும் மருத்துவமனையில்
இந்நிலையில் தனது இரண்டு பிள்ளைகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு, தானும் விஷம் அருந்திய தாயொருவர் தற்போது வத்துபிட்டிவல வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
அதேசமயம் தாயினால் விஷமூட்டப்பட்ட, எட்டு வயதான மற்றைய பிள்ளை கொழும்பு சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்