முட்டையின் விலை உயர்வை கட்டுப்படுத்த இந்தியா அல்லது பாகிஸ்தானில் இருந்து முட்டைகளை இறக்குமதி செய்ய வேண்டும், இல்லையெனில் ரொட்டி தவிர ஏனைய வெதுப்பக பொருட்களின் விலையை அதிகரிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கறுப்புச் சந்தை விலையை கட்டுப்படுத்த
இந்தியா அல்லது பாகிஸ்தானில் இருந்து முட்டைகளை இறக்குமதி செய்தால் ஒரு முட்டையை 30 – 32 ரூபாய் வரை விற்பனை செய்ய முடியும் என்று அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என். கே. ஜயவர்தன தெரிவித்தார்.
முட்டை ஒன்றின் விலை இதுவரை 70 ரூபாவாக உயர்ந்துள்ளதாகவும் , இந்த கறுப்புச் சந்தை விலையை கட்டுப்படுத்துவதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஜயவர்தன மேலும் தெரிவித்தார்.