இலங்கையில் மதுபான விருந்து ஒன்றின் போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார் .
விருந்துக்கு வந்த நபரொருவர் விருந்து இடம்பெற்ற வீட்டின் உரிமையாளரை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில் நாகியாதெனிய பிரதேசத்தைச் சேர்ந்த 78 வயதான ஒருவரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இவ்விலையில் கொலையைச் செய்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை உடுகம பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.