தற்போது வழங்கப்படும் கடன்களுக்கான வட்டி வீதத்தை 15.5 சதவீதமாக அதிகரிக்க மக்கள் வங்கி தீர்மானித்துள்ளதாக கூறப்படுகின்றது.
அதன்படி சந்தையில் அதிகரித்து வரும் வட்டி வீதத்திற்கு ஏற்ப கடன்களுக்கான வட்டி அறவிடப்படவுள்ளது.
அதேசமயம் சந்தை நிலைமை வழமைக்கு திரும்பிய பின்னர் வாடிக்கையாளர்களுக்கு தேவையான நிவாரணங்களை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மக்கள் வங்கியின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்