நவம்பர் மாதத்தில் இலங்கை மின்சார சபையின் வருமானம் 35.6 பில்லியன் ரூபா என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
அதேபோல், ஒக்டோபர் மாதத்தில் மின்சார சபையின் வருமானம் 33.6 பில்லியன் ரூபாவாக பதிவாகியுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய கட்டண முறைக்கு அமைய இந்த வருமானம் பதிவாகியுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எவ்வாறாயினும் ஜனவரி மாதத்தில் நெப்தா மற்றும் டீசலுக்கு 35 பில்லியன் ரூபாவும், நிலக்கரிக்கு 38.45 பில்லியன் ரூபாவும் தேவைப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.
இதேவேளை, மின்சாரத் துறையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை குறித்து நேற்று (28) இடம்பெற்ற கலந்துரையாடலில் உத்தேச மின்சாரக் கட்டணத் திருத்தம், மறுசீரமைப்புச் செயற்பாடுகள், செலவுக் கட்டுப்பாடு மற்றும் மின்சார சபையின் சேவைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக அமைச்சர் குறிப்பிட்டார்.