வவுனியாவில் ஐஸ் போதைப் பொருளுடன் இளைஞன் ஒருவர் கைது நேற்று (27) செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வவுனியா பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்து வவுனியா, உக்குளாங்குளம் பகுதியில் விசேட நடவடிக்கை ஒன்றை பொலிஸார் முன்னெடுத்திருந்தனர்.
இதன்போது மோட்டர் சைக்கிள் ஒன்றில் ஐஸ் போதைப் பொருளுடன் சென்ற ஒருவர் பொலிஸாரால் மடக்கிப் பிடிக்கப்பட்டதுடன், அவரிடம் இருந்து ஐந்தாக பொதி செய்யப்பட்ட நிலையில் 20 கிராம் ஐஸ் போதைப் பொருள் மீட்கப்பட்டது.
இதனை அடுத்து குறித்த மோட்டர் சைக்கிளுடன் இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன், நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.