கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்ட நிலையில் நபர் ஒருவர் மீட்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.
இச் சம்பவம் கடுவளை வெலிவிட்ட பிரதேசத்தில் இடம் பெற்றுள்ளது.
மீட்பு
இவர் கழுத்து பகுதியில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகிய நிலையில் மீட்கப்பட்டு கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் இன்று காலை இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் இது தொடர்பானவிசாரணைகள் கடுவளை பொலிஸார் மேற்கொள்ள ஆரம்பித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.