தடை செய்யப்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுக்களை வைத்திருந்த குடும்பப் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.
இச் சம்பவம் அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வீடு ஒன்றில் வைத்திருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சுமார் 800 சட்டவிரோதமாக சிகரெட்டுக்களை 54 வயதுடைய குடும்ப பெண் வைத்திருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சோதனை
இதனை கல்முனை விசேட அதிரடிப்படையினர் சோதனையின் போது கண்டுபிடித்து அப் பெண்ணை கைது செய்துள்ளனர்.
குறித்த பிரதேசத்தில் போதைப்பொருள் பாவனை தொடர்பாக கல்முனை விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் இச்சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட நபர் உள்ளிட்ட சான்று பொருட்கள் அனைத்தையும் நிந்தவூர் பொலிஸாரிடம் நீதிமன்ற நடவடிக்கைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் விசேட அதிரடிப்படையினர் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டுள்ளனர்.