மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் தென் மாகாணங்களில் இன்று இரவு வேளையில் 150 மில்லிமீற்றர் அளவில் இடியுடன் கூடிய கடும் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
ஏனைய பகுதிகளிலும் மழையுடனான வானிலை நிலவும் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, நாடளாவிய ரீதியில் இடைக்கிடையே மணித்தியாலத்திற்கு 40 முதல் 50 மில்லிமீற்றர் அளவில் காற்று வீசக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.