வடக்கு மற்றும் கிழக்கில் இருந்து விலங்குகள் மற்றும் இறைச்சிகளை கொண்டு செல்வதற்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
குளிர் காலநிலை காரணமாக வடக்கு மற்றும் கிழக்கில் கால்நடைகள் இறந்தமை உறுதி செய்யப்பட்ட நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதற்கு முன்னதாக வடக்கு மாகாணம் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலிருந்தும் இறைச்சி போக்குவரத்து அனுமதிக்கப்பட்டது.
அதன்படி கடந்த மாதம் ஏற்பட்ட குளிருடனான காலநிலை காரணமாக யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி மற்றும் வவுனியா மாவட்டங்களில் சுமார் 1600 கால்நடைகள் உயிரிழந்தன.