அதன்படி முதல் 30 யுனிட்டுகளுக்கான கட்டணம் எட்டில் இருந்து ஐம்பது ரூபாயாக அதிகரிக்கப்படும் என்றும், முதல் 30 யுனிட்டுகளுக்கு ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் 1,500 ரூபாய் நிலையான கட்டணத்துடன் 3,000 ரூபாய் கட்டணமாக வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை எண்ணெய் துறைமுகங்கள் மீதான கூட்டு பணிக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் ஆனந்த பாலித தெரிவித்துள்ளார்.
மின்சாரக் கட்டண திருத்தச் சட்டமூலம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாகத் தெரிவித்த அவர் இது முற்றிலும் கறுப்புச் சந்தை எனவும் குற்றம் சுமத்தியுள்ளார்.
ஆனந்த பாலிதவின் கூற்று
“மின் கட்டண திருத்த மசோதா அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட உள்ளது. முதல் யுனிட்டுக்கு இதுவரை வசூலிக்கப்பட்ட 8 ரூபாய் இப்போது 50 ரூபாயாகிறது. 1,500 நிலையான கட்டணங்கள் அதாவது 30 யுனிட் பயன்படுத்துபவர் மூவாயிரம் ரூபாய் செலுத்த வேண்டும். மின் கட்டணமும் மின் அலகும் அதிகரிக்கப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.