தனியார் விருந்தில் போதைப்பொருள் பாவித்த குற்றச்சாட்டின் கீழ் 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக திணைக்களம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெந்தோட்டை பொலிஸ் பிரிவில் போடியொலுவ பிரதேசத்தில், விடுமுறை இல்லத்தில் விருந்து நடத்தப்பட்டுள்ளது.
பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு தேடுதலின் போது, 1 கிராம் 535 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருடன் 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் 21 வயதுக்கும் 37 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
அத்துடன், அவர்கள, வத்தளை, கொழும்பு-12, நாரஹேன்பிட்ட, கொட்டாஞ்சேனை, மாளிகாவத்தை, மட்டக்குளிய மற்றும் வலஸ்முல்ல பிரதேசங்களைச் சேர்ந்தவர்களாவர்.
கைது செய்யப்பட்டவர்களை பலப்பிட்டிய நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த பெந்தோட்டை பொலிஸார், மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டுள்ளனர்.