LPL கிரிக்கெட் போட்டித் தொடரின் இன்று இடம்பெறும் 15 ஆவது போட்டியில் தம்புள்ளை ஓரா மற்றும் கோல் கிளெடியேட்டர்ஸ் அணிகள் மோதுகின்றன.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற முதலில் துடுப்பெடுத்தாடிய தம்புள்ளை ஓரா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 178 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.
அவ்வணி சார்பில் ஷெவோன் டேனியல் 80 ஓட்டங்களையும் ஜோர்டான் காக்ஸ் 77 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக் கொண்டனர்.
பந்து வீச்சில் நுவன் பிரதீப் 3 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.
அதன்படி, கோல் கிளெடியேட்டர்ஸ் அணிக்கு வெற்றி இலக்காக 179 ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது