மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்கள் கனவுகள் பலிக்கக்கூடிய இனிய அமைப்பாக அமைந்துள்ளது. சுபகாரிய பேச்சு வார்த்தைகளில் வெற்றி காணும் யோகம் உண்டு. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத லாபம் கிட்டும். பணப்புழக்கம் சீராக இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு சோர்வு காணப்படும்.
ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் கவனமாக இருப்பது நல்லது. சாதகமற்ற அமைப்பு என்பதால் பேச்சு வார்த்தைகளில் வாக்குவாதங்களை தவிர்ப்பது உத்தமம். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு இதுவரை இருந்து வந்த கடன் பிரச்சினைகள் தீரக்கூடிய வாய்ப்பு கிட்டும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் நிதானம் தேவை.
மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிலும் நன்மைகள் காணக்கூடிய நல்ல அமைப்பாக இருக்கிறது. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு நண்பர்கள் தோள் கொடுத்து உதவக்கூடிய நல்ல நாளாக இருக்கப் போகிறது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர் பார்த்த சலுகைகள் கிடைக்கும். குடும்பத்தில் அடிப்படை வசதிகள் பெருகும்.
கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் முன்னேற்றம் நிறைந்த நல்ல அமைப்பாக அமைந்துள்ளது. நீங்கள் தொட்டதெல்லாம் வெற்றியாகும். குடும்பத்தில் உற்றார் உறவினர்களின் ஆதரவு பெருகும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு நாட்டுப்பற்று அதிகரித்து காணப்படும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உடன்பிறப்பு வழியில் நல்ல செய்திகள் வரும்.
சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்த நல்ல நாளாக அமைய இருக்கிறது. இதுவரை இருந்து வந்த பிரச்சனைகள் தீரும் யோகம் உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு கூடுதல் வருமானம் அதிகரிக்கும். சுய தொழிலில் உள்ளவர்கள் வரும் வாய்ப்புகளை தவறாமல் பயன்படுத்திக் கொள்வது புத்திசாலித்தனமாகும். கன்னி: கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் இதுநாள் வரை இழுப்பறியில் இருந்து வந்த வேலைகள் முடிவடைவதற்கான அறிகுறி தென்படும் நல்ல நாளாக இருக்கப் போகிறது. குடும்பத்தில் அமைதி நிலவும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு தாழ்வு மன பண்பை இல்லாமல் இருப்பது நல்லது. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு கைமாத்தாக கொடுத்த பணம் திரும்ப கிடைக்க வாய்ப்பு உண்டு. – Advertisement – துலாம்: துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் முடியவே முடியாது என்று நினைத்த காரியமும் சுலபமாக முடியக்கூடிய வாய்ப்புகள் கிட்டும் நல்ல நாளாக இருக்கிறது. கொடுக்கல் வாங்கல் பிரச்சினைகள் தீரும். சுப காரிய தடைகள் விலகும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு தொலைதூர இடங்களில் இருந்து கலகலப்பான செய்திகள் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு போட்ட திட்டம் நிறைவேறும். விருச்சிகம்: விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் தன்னம்பிக்கை அதிகரித்து காணக்கூடிய நல்ல நாளாக அமைய இருக்கிறது. தொலைதூர பயணங்கள் மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். குடும்பத்தில் தேவையற்ற பிரச்சனைகளை வளர்த்துக் கொள்ள வேண்டாம். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு வீண் பகை ஒழியும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் தங்கள் முன்னேற்றத்தை நோக்கி பயணிப்பார்கள். தனுசு: தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் வீண் அலைச்சல் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு எனவே கவனமுடன் இருப்பது நல்லது. சில விஷயங்கள் உங்களை சிந்திக்க வைக்க கூடியதாக அமையும். கணவன் மனைவி இடையே இருக்கும் பிரச்சனைகள் தீரும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு காரிய வெற்றி உண்டாகும். கிடைக்க வேண்டிய தொகை கைக்கு வந்து சேரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு தேவைகள் பூர்த்தியாகும். மகரம்: மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் மனதில் இருக்கும் பிரச்சனைகள் நீங்க கூடிய நல்ல அமைப்பாக இருக்கிறது. குடும்பத்தினர் உங்களை புரிந்து கொள்ள முயற்சி செய்ய வாய்ப்பு உண்டு. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு செவி வழி தகவல்கள் நல்ல பலன்களை கொடுக்கக் கூடியதாக இருக்கப் போகிறது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேலதிகாரிகளுடன் நெருக்கம் உண்டாகும். கும்பம்: கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் விழிப்புணர்ச்சியுடன் செயல்பட வேண்டிய அமைப்பாக இருக்கிறது. சாதகமற்ற பலன்கள் கிடைக்க வாய்ப்பு உண்டு என்பதால் அவசரப்படாமல் முடிவெடுப்பது நல்லது. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு வீண் பழிகள் அகலும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் பயணங்களில் கவனமுடன் இருப்பது நல்லது. ஆரோக்கிய ரீதியான பிரச்சனைகள் தீரும். மீனம்: மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிர்பாராத திடீர் அதிர்ஷ்டம் வரக்கூடிய நல்ல அமைப்பாக இருக்கிறது. உழைப்பால் உயரக்கூடிய வாய்ப்பு உண்டு. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு செல்வாக்கு அதிகரித்து காணப்படும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை நீடிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு அரசு வழி காரியங்களில் சுப பலன்கள் கிடைக்கும். புதிய சொத்து வாங்குவதில் கவனம் வேண்டும்.