பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசன் கடந்த மாதம் அக்டோபர் 9-ம் திகதி 21 போட்டிய”ளர்களுடன் ஆரம்பமானது. முதலாவதாக ஜிபி முத்து நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக வீட்டை விட்டு வெளியேறியதை அடுத்து அடுத்ததாக எலிமினேஷன் லிஸ்ட்டில் இருந்த டான்ஸ் மாஸ்டர் சாந்தி குறைவான வாக்குகளை பெற்றதல் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
தொடர்ந்து அடுத்த அடுத்த வாரங்களில் அசல், ஷெரினா, மகேஸ்வரி, நிவாஷினி, ராபர்ட் மற்றும் குயின்சி ஆகியோர் வீட்டைவிட்டு வெளியேற்றப்பட்டனர். மேலும் கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து இரண்டு பேர் எலிமினேட் செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் சனிகிழமை ராம் மற்றும் ஞாயிற்று கிழமை ஆயிஷா எலிமினேட் செய்யப்பட்ட நிலையில் தற்போது 11 போட்டொஇயாளர்கள் உள்ளனர்.
இந்த வார டாஸ்க்
இந்த வார டாஸ்க்காக பிக்பாஸ் சொர்க்கமா, நரகமா என்ற தலைப்பில் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் இரண்டு அணிகளாக பிரிந்து விளையாடுகின்றனர். இன்று பிக்பாஸ் வீட்டில் 67-வது நாளிற்கான முதல் ப்ரோமோ வீடியோவை நிகழ்ச்சி குழு வெளியிட்டுள்ளது.
அதில் சொர்க்கம் மற்றும் நரக்கத்தில் இருந்து ஒரு நபரை மாற்றிக்கொள்ள பிக்பாஸ் கூறுகிறார். அப்போது சொர்க்கத்தில் இருக்கும் ஏடிகேவை நரகத்திற்கு அழைப்பதாக விக்ரமனும் நரகத்தில் இருக்கும் கதிரவனை சொர்க்கத்திற்கு மாற்றுவதாக மணிகண்டனும் கூறுகின்றனர்.
அப்போது ஏடிகேவை நரகத்திற்கு மாற்றுவதற்கான காரணமாக ஷிவின் மற்றும் அசீம் எமோஷனல் ஸ்டேபிலிட்டு ஏடிகேவிற்கு இல்லை என்று கூறியதாக விக்ரமன் கூறுகிறார்.
இதனை கேட்ட ஏடிகே கடுப்பாகி உள்ளே செல்ல ஷிவின் சிரிக்க, அதனை பார்த்த ஏடிகே யாராவது சிரிச்சீங்கனா அசிங்கமா கேப்பேன் வாக்குவாதம் முற்றும் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.