பிக்கு மூவர் சித்திரவதைக்குள்ளானதாக ஹோமாகம பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஹோமாகம பாலி மற்றும் பௌத்த பல்கலைக்கழகத்தில் சித்திரவதைக்குள்ளான மூன்று மாணவ பிக்குகளே இம் முறைப்பாட்டை செய்துள்ளனர்.
அபய என்ற சித்திரவதை அறையில் வைத்து கொடூரமான முறையில் தாக்குதல் நடத்தி ஆடைகளை அகற்றி வன்கொடுமை செய்தமை மற்றும் மனிதாபிமானமற்ற சித்திரவதைகள் குறித்தும் முறைப்பாடு செய்துள்ளதாக ஹோமாகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இலங்கையில் இரண்டு இடதுசாரி அரசியல் கட்சிகளுடன் தொடர்புடைய சிரேஷ்ட மாணவர்கள் குழுவொன்று தொடர்ந்து குழப்பங்களை ஏற்படுத்தி வருவதாகவும் அவர்களில் இந்தப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவரும் உள்ளதாகவும் அவர்கள் பொலிஸாரிடம் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹோமாகம பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்