உமா ஓயா திட்டத்தின் மூலம் ஜூன் மாதத்திற்குள் தேசிய மின்சார அமைப்பில் 120 மெகாவோட் சேர்க்கப்படும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
புதிய நீர் மின் நிலையத்தின் நிர்மாணப் பணிகள் தொடர்பாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் இன்று (13) காலை கட்டுமான நிறுவனத்தின் பிரதிநிதிகளுடன் நடத்திய கலந்துரையாடலில் இது தொடர்பில் தெரிய வந்துள்ளது.
ஈரான் அரசின் பராப் கட்டுமானம் மற்றும் பொறியியல் நிறுவனம் இந்த வளர்ச்சிப் பணிகளை மேற்கொண்டு வருகிறது.
இத்திட்டத்தின் கட்டுமானப் பணிகள் எதிர்வரும் ஏப்ரல் மாத இறுதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அதன்படி, எதிர்வரும் ஜூன் மாதம் முதல் முழு கொள்ளளவில் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு தேசிய மின் தொகுப்பில் சேர்க்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.