2017 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க வெளிநாட்டுச் செலாவணி சட்டத்தின் (சட்டம்) 11 (3) ஆம் பிரிவின் நியதிகளுக்கமைவாக, இல.42A, முதலிகே மாவத்தை, கொழும்பு 01 மற்றும் இல.57, காலி வீதி கொழும்பு 06 என்ற முகவரிகளில் முறையே அதன் தலைமை அலுவலகத்திலும் கிளையிலும் நாணய மாற்று தொழிலில் ஈடுபடுவதற்கு பிரசன்னா மணி எக்சேன்ஜ் (பிறைவேற்) லிமிடெட்டிற்கு வழங்கப்பட்ட அனுமதிப் பத்திரத்தின் தற்காலிக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
இதனையடுத்து கம்பனி மூலம் புரியப்பட்ட இணங்காமைகள் தொடர்பில் விசாரணையொன்றை மேற்கொண்டதன் பின்னர், பிரசன்னா மணி எக்சேன்ஜ் (பிறைவேற்) லிமிடெட்டிற்கு வழங்கிய DFE/RD/0058 ஆம் இலக்க அனுமதிப் பத்திரத்தை நிரந்தரமாக இரத்துச் செய்வதற்கு இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை தீர்மானித்துள்ளது.
அதிகாரமளிக்கப்பட்ட நாணய மாற்றுநரொருவராக பிரசன்னா மணி எக்சேன்ஜ் (பிறைவேற்) லிமிடெட், நாணய மாற்றல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு இனிமேலும் அனுமதிக்கப்படவில்லை எனவும், பிரசன்னா மணி எக்சேன்ஜ் (பிறைவேற்) லிமிடெட்டுடன் வெளிநாட்டு நாணயங்களை வாங்குதல், விற்பனைசெய்தல் மற்றும் பரிமாற்றம்செய்தல் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு முரணானதாகக் கருதப்படும் எனவும் பொதுமக்களுக்கு இத்தால் அறிவிக்கப்படுகிறது.