12,000 இற்கும் மேற்பட்ட குழந்தைகள் தற்போது அனாதை இல்லங்களில் கைவிடப்படுகின்றதாக லேடி ரிட்ஜ்வே மருத்துவமனை (LRH) ஆலோசகர் குழந்தை நல மருத்துவர் டாக்டர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.
பெற்றோர்கள் போதைக்கு அடிமையானவர்கள் என்பதால் பெரும்பாலான குழந்தைகள் தங்கள் பாட்டி அல்லது தாத்தாவுடன் மருத்துவமனைகளுக்கு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,
மாணவர்களிடையே போதைப்பொருள்
அதோடு பயங்கரவாதத்தை விட பாடசாலை மாணவர்களிடையே போதைப்பொருள் தொடர்பான அனைத்து பழக்கங்களும் மிகவும் ஆபத்தானது.
இந்த சூழ்நிலைக்கு எதிராக மக்கள் அனைத்து பிரசாரங்களையும் தொடங்க வேண்டும். ICE எனும் போதைப்பொருள் பாடசாலை மாணவர்களிடையேயும் இளம் பராயத்தினர் மத்தியிலும் வேகமாக பரவி வருகிறது.
மாணவர் சமுதாயத்தினரிடையே போதைக்கு அடிமையானவர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. மாணவர்களை போதைக்கு அடிமையாக்குவது தற்போதைய சூழ்நிலையில் ஒரு ட்ரெண்டிங்காக மாறியுள்ளது.
“இன்றைய நாட்களில் பாடசாலை மாணவ மாணவிகளை பிக் மேட்ச்கள் மூலம் பீர் குடிக்க வைப்பது அதிகரித்துள்ளது. இறுதியில் அவர்கள் ஏதோ ஒரு வகையில் போதைக்கு அடிமையாகி விட்டனர்.
அவர்களில் சிலர் ஐஸ் பாவனையை நோக்கி தள்ளப்பட்டுள்ளனர். எந்தவொரு போதைப்பொருளின் ஒரு முறை உபயோகித்தாலும் சிறுவர்கள் நிரந்தரமாக அடிமையாகி விடுகிறார்கள்.
” “போதைப்பொருள் வியாபாரிகளுக்கு எதிராக கிராமங்களில் இருந்து அனைத்து பிரசாரங்களும் போராட்டங்களும் தொடங்கப்பட வேண்டும், போதைப்பொருள் அச்சுறுத்தல் மேலும் பரவினால், நாட்டின் பொறுப்புகளை ஏற்க அடுத்த தலைமுறையே இருக்காது.
பாடசாலைகளுக்குள் போதைப்பொருள் நுழைவதற்கான சாத்தியமான அனைத்து வழிகளும் தடுக்கப்பட வேண்டும். மதுபானம் மற்றும் சிகரெட் போன்ற போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபடும் நபர்கள், அவற்றை வாங்குபவர்களுக்கும் அதிகபட்ச தண்டனை வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.