ருஹுணு தேசிய கல்வி பீடத்தில் இடம்பெற்ற மாணவர் மோதலுடன் தொடர்புடைய 54 மாணவர்கள் தமது கல்வியைத் தொடரும் வாய்ப்பினை இழந்துள்ளனர்.
அந்த மோதல் தொடர்பில் கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் தலைமையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இரு குழுக்களுக்கிடையில் மோதல்
கடந்த நவம்பர் 26 ஆம் திகதி ருஹுணு கல்வி பீடத்தில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் காயமடைந்த 12 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றிருந்தனர்.
சம்பவம் தொடர்பில் கல்வி அமைச்சு விசேட அவதானம் செலுத்தியுள்ளதாக கல்லூரி ஆணையாளர் ரஞ்சித் சந்திரசேகர கூறினார்.
அதோடு ஆசிரியர் கல்வியில் ஈடுபடும் மாணவர்களின் ஒழுக்கத்தை பேணுவதற்கான அதிகபட்ச நடவடிக்கைகளை கல்வி அமைச்சு பின்பற்றி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.