இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக குடியேற முயன்றதாக சந்தேகிக்கப்படும் 20 பேரை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
இன்று (05) காலை மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, பல நாள் மீன்பிடி கப்பலில் இருந்த குழுவினர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த கடத்தலில் ஈடுபட்ட 6 பேர் உட்பட 18 வயதுக்கு மேற்பட்ட 16 பேர் இருப்பதாக கடற்படை தெரிவித்துள்ளது.
அந்தக் குழுவைத் தவிர, ஒரு பெண்ணும், 18 வயதுக்குட்பட்ட மூன்று பேரும் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இவர்கள் களுவாஞ்சிகுடி, மட்டக்களப்பு, மூதூர், யாழ்ப்பாணம் மற்றும் நீர்கொழும்பு ஆகிய பகுதிகளில் வசிப்பவர்கள் என கடற்படை தெரிவித்துள்ளது.
அவர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக திருகோணமலை துறைமுக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்.