மேஷம்:
மேஷ ராசியினருக்கு இன்றைய தினம் பணவரவு திருப்திகரமாக இருக்கும். உடல் மற்றும் மனம் உற்சாகமாக இருக்கும். வெளியூர் பயணங்களால் லாபம் உண்டாகும். தம்பதிகளிடையே அன்யோன்யம் பெருகும். சிலருக்கு சுப விரயங்கள் உண்டாகும்.
ரிஷபம்:
ரிஷப ராசியினருக்கு இன்றைய தினம் சிறந்த நாளாக இருக்கும். சிலர் புதிய வாகனம், சொத்துக்களை வாங்குவார்கள். அந்நிய நபர்களால் சிலருக்கு பணவரவு ஏற்படும். குடும்பத்தில் பெண்களால் மகிழ்ச்சி ஏற்படும்.
மிதுனம்:
மிதுன ராசியினருக்கு இன்று சராசரியான நாளாகவே இருக்கும். சிலர் உறவினர்களின் சுப நிகழ்வுகளுக்கு சென்று மகிழ்வீர்கள். பிறருக்கு கடன் கொடுப்பதை தவிர்க்கவும். பெரியவர்களின் ஆசிகள் முழுமையாக கிடைக்க பெறுவீர்கள்.
கடகம்:
கடக ராசியினருக்கு இன்றைய தினம் சிறப்பானதாக இருக்கும். உறவினர்கள் மத்தியில் மதிப்பு ஏற்படும். பெரிய மனிதர்களின் தொடர்பால் விரும்பிய உதவிகள் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் எதிர்பாராத லாபங்கள் ஏற்படும். குழந்தைகளால் மகிழ்ச்சி ஏற்படும்.
சிம்மம்:
சிம்ம ராசியினருக்கு இன்றைய தினம் சந்திராஷ்டமம் என்பதால் பெரிய லாபங்கள் இருக்காது. பிறருடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். புதிய ஒப்பந்தங்களை மேற்கொள்வதை தவிர்க்கவும். எதிலும் கவனமுடன் செயல்பட வேண்டும்.
கன்னி:
கன்னி ராசியினருக்கு இன்றைய தினம் சராசரியானதாக இருக்கும். தொழில், வியாபாரங்களில் ஓரளவு லாபம் ஏற்படும். தொலைதூர பயணங்களால் சிலருக்கு அசதி ஏற்படும். சிலருக்கு உடல்நல பாதிப்புக்கள் ஏற்பட்டு நீங்கும்.
துலாம்:
துலாம் ராசியினருக்கு இன்றைய தினம் உற்சாகமானதாக இருக்கும். சிலர் புனித தலங்களுக்கு சென்று வருவீர்கள். பணம் கொடுக்கல் வாங்கல்களில் திருப்தி ஏற்படும். கலைஞர்களுக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிடைக்கும். மக்கள் செல்வாக்கு உண்டாகும்.
விருச்சிகம்:
விருச்சிக ராசியினருக்கு இன்றைய தினம் சுப காரிய பொருள் விரயம் ஏற்படும். பணவரவுகளில் இழுபறி நிலை ஏற்படும். எதிர்பார்த்த உதவிகள் சரியான நேரத்தில் கிடைக்கும். சிலர் குடும்பத்துடன் வெளியில் சென்று வருவீர்கள்.
தனுசு:
தனுசு ராசியினருக்கு இன்றைய தினம் மகிழ்ச்சியான நாளாக இருக்கும். குடும்பத்தில் இருப்பவர்களின் ஆதரவு இருக்கும். சிலர் வீட்டிற்கு தேவையான ஆடம்பர பொருட்களை வாங்குவீர்கள். பழைய நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள்.
மகரம்:
மகர ராசியினருக்கு இன்றைய தினம் குடும்ப பொறுப்புகள் அதிகரிக்கும். வெளியூர் பயணங்களால் சிலருக்கு அசதி ஏற்படும். சுபகாரிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் இருக்கும் பெண்களுக்கு உடல்நல பாதிப்புகள் ஏற்பட்டு நீங்கும்.
கும்பம்:
கும்ப ராசியினருக்கு இன்றைய தினம் உற்சாகமானதாக இருக்கும். வெளிநாடு தொடர்பான முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். குழந்தைகளால் மகிழ்ச்சி ஏற்படும். சகோதர வழியில் உதவிகள் கிடைக்கும். வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை.
மீனம்:
மீன ராசியினருக்கு இன்றைய தினம் கொடுக்கல் வாங்கலில் இழுபறி நிலை ஏற்படும். வீண் அலைச்சலால் சிலருக்கு உடல் நல பாதிப்புகள் ஏற்படும். சுப காரிய முயற்சிகளில் சிறிய தாமதத்திற்க்கு பிறகு வெற்றி கிடைக்கும்.