பன்னல பிரதேசத்தைச் சேர்ந்த 15 வயதுடைய மாணவி ஒருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் குளியாப்பிட்டிய நீதவான் நீதிமன்றில் முன்னிலைபடுத்தப்பட்டதன் பின்னர் டிசம்பர் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் தங்கொடுவ, வென்னபுவ, மகும்புர உள்ளிட்ட பல பிரதேசங்களில் விஞ்ஞான பாடத்திற்கு பாடம் நடத்தும் 24 வயதுடைய வகுப்பாசிரியர் என தெரிய வந்துள்ளது.
பாதிக்கப்பட்ட தரம் 10 மாணவியிடம் கருத்தடை மாத்திரைகள் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பன்னல பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர் வகுப்பு மாணவர்களுக்காக உருவாக்கப்பட்ட வாட்ஸ் அப் குழுவின் ஊடாக பாதிக்கப்பட்ட பெண்ணின் இலக்கத்தை பெற்று, குழந்தையை மயக்கியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சந்தேக நபர் பன்னிபிட்டியவில் உள்ள கல்வி நிலையம் ஒன்றில் வகுப்புகளை நடத்திக் கொண்டிருந்த போதே கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரும் பாதிக்கப்பட்ட நபரும் காதல் விவகாரத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் எனவே பிணை வழங்குமாறும் அவரது சட்டத்தரணி நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.
மேலும் சந்தேகநபரை விளக்கமறியலில் வைத்த நீதிமன்றம் வகுப்பில் உள்ள மற்ற மாணவிகளிடம் விசாரணை நடத்தி, கண்டறிந்த உண்மைகளை நீதிமன்றத்தில் முன்வைக்குமாறு காவல்துறைக்கு அறிவித்து .