இலங்கை விவசாயிகள், மீனவர்களுக்கு சீனாவினால் வழங்கப்படும் 10.6 மில்லியன் லீற்றர் டீசல் இலவசமாக வழங்கப்படும் என இலங்கைக்கான சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது.
இலவச எரிபொருள் அதன்படி 2022/23 பெரும்போகத்தில் இலங்கை முழுவதும் 342,266 ஹெக்டேர் நெல் வயல்களை அறுவடை செய்வதற்காக 232,749 விவசாயிகளுக்கு எரிபொருள் இலவசமாக வழங்கப்படும்.
மேலும், இலங்கையில் ஆழ்கடல் மீன்பிடியில் ஈடுபடும் 3,796 மீன்பிடி கப்பல்களுக்கும் சீனாவினால் இலவசமாக டீசல் வழங்கப்படும் என சீனத் தூதரகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.