இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று கண்டி, பல்லேகெல விளையாட்டரங்கில் இடம்பெற்று வருகின்றது.
போட்டியின் நாணய சுழற்சியை வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.
அதனடிப்படையில் முதலில் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 48.2 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்களையும் இழந்து 228 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.
துடுப்பாட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணி சார்ப்பில் ரஹ்மனுல்ல குர்பாஸ் 68 ஓட்டங்களையும் ரஹ்மத் ஷா 58 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக் கொண்டனர்.
பந்து வீச்சில் கசுன் ராஜித 3 விக்கெட்களையும், மஹீஷ் தீக்ஷன மற்றும் லஹிரு குமார ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் வீழ்த்தியிருந்தனர்.
அதனடிப்படையில் இலங்கை அணிக்கு 229 ஓட்டங்கள் வெற்றியிலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.