மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் குடும்பத்தில் சிறு சிறு மன கசப்புகள் வருவதற்கு வாய்ப்புகள் உண்டு கவனம் தேவை. சுயதொழில் செய்பவர்களுக்கு கடன் தொல்லைகள் அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்கள் ஆக்கத்துடன் செயல்பட்டு பாராட்டுகளை பெறுவீர்கள்.
ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிலும் தேர்ச்சி அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. கணவன் மனைவி ஒற்றுமையில் விரிசல் விழுகாமல் இருக்க இன்சொல்லால் பேசுவது நல்லது. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத நற்செய்தி காத்திருக்கிறது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உடல் நலத்தில் கவனம் தேவை.
மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நன்மைகள் நடக்கக்கூடிய நல்ல நாளாக இருக்கிறது. குடும்பத்தில் அமைதி நிலவும். கணவன் மனைவி இடையே அவசரப்படாமல் பொறுமையுடன் இருப்பது நல்லது. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு போட்டிகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் புத்துணர்ச்சியுடன் செயல்படக்கூடிய அமைப்பாக இருக்கிறது.
கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் கோபத்தை குறைத்துக் கொள்வது நல்லது. தேவையற்ற கோபம் தேவையற்ற இழப்புகளை ஏற்படுத்தும். கணவன் மனைவி இடையே பாசம் அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு தலைமை பண்புடன் செயல்படக்கூடிய வாய்ப்பு உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சோர்வு ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு.
சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் பக்தியின் பக்கம் உங்களுடைய கவனம் திரும்புவதற்கு வாய்ப்புகள் உண்டு. குடும்பத்தில் இனம் புரியாத ஒரு குதூகலம் காணப்படும். எதிர்பாராத நண்பர்களை சந்திக்க வாய்ப்புகள் உண்டு. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு களிப்பு ஏற்படும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நன்மைகள் நடக்க நிதானம் தேவை.
கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் இனிமையுடன் அமையக்கூடிய நல்ல அமைப்பாக இருக்கிறது. புதிய தொழில் துவங்க நினைப்பவர்களுக்கு சாதகமான பலன்கள் கிட்டும். சுய தொழிலில் எதிர்பார்த்த லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சகிப்புத்தன்மை தேவை. அனாவசியமாக நிதானத்தை இழந்து விட வேண்டாம்.
துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய அதிகாரம் மற்றவர்களிடம் செல்லுபடி ஆகாது. குடும்ப பொறுப்புகள் அதிகரிக்க வாய்ப்பு உண்டு. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு புத்திசாலித்தனத்தின் மூலம் எதிர்பார்த்த அனுகூலமான பலன்கள் கிடைக்க இருக்கிறது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு தங்கள் திறமையின் மூலம் புது அங்கீகாரம் பிறக்கும்.
விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் மகிழ்ச்சி நிறைந்த நல்ல நாளாக அமைய இருக்கிறது. குடும்பத்தில் சகோதர சகோதரிகளுக்கு இடையே இருந்து வந்த மனக்கசப்புகள் தீரும். தம்பதியர் ஒற்றுமை மேலோங்கி காணப்படும். சுய தொழிலில் எதிர்பார்க்கும் உழைப்பு மற்றவர்களிடமிருந்து கிடைக்காமல் போக வாய்ப்பு உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த கணிப்பு சரியாக அமையும்.
தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் இனிமையான நல்ல நாளாக இருக்கப் போகிறது. கணவன் மனைவிக்கு இடையே சிறு சிறு சண்டை, சச்சரவுகள் வரலாம். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு செல்வாக்கு அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு திறமைகள் வெளிப்படக்கூடிய வாய்ப்பு உண்டு. ஆரோக்கியத்தில் அலட்சியம் வேண்டாம்.
மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நலன் காணக்கூடிய நல்ல நாளாக இருக்கிறது. குடும்பத்தில் இழுப்பறியாக இருந்த செயல்களும் உடனடியாக முடியக்கூடிய வாய்ப்பு உண்டு. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு அரசு வழி காரியங்களில் காலதாமதம் ஏற்படலாம். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எடுத்த முயற்சிகள் திருவினையாகும் நல்ல நாளாக இருக்கிறது. கணவன் மனைவிக்கு இடையே இருந்து வந்த சிறு சிறு சலசலப்புகள் நீங்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத அளவில் போட்டியாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மனதில் சிறு பயம் வந்து செல்லும்.
மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய முயற்சி வெற்றி அடையக்கூடிய நல்ல நாளாக இருக்கிறது. குடும்பத்தில் மற்றவர்களை புண்படுத்தாமல் பேச முயற்சி செய்வது நல்லது. சுய தொழிலில் உள்ளவர்கள் தேவையற்ற பிரச்சனைகளில் குறுக்கிட வாய்ப்பு உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு விலகி சென்றவர்கள் விரும்பி வர வாய்ப்பு உண்டு.