இலங்கையின் நாடளாவிய ரீதியில் உள்ள பாடசாலைகளுக்கு சீனாவினால் நன்கொடையாக வழங்கப்பட்ட மற்றுமொரு அரிசித் தொகை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக சீன தூதரகம் தெரிவித்துள்ளது.
1,000 மெற்றிக் தொன் (100,000 பொதிகள்) கொண்ட புதிய அரிசி தொகை இன்று (19) காலை கொழும்பு துறைமுகத்திற்கு வந்துள்ளதுடன் குறித்த அரிசித் தொகை விரைவில் விநியோகிக்கப்படவுள்ளதாக சீன தூதரகம் மேலும் தெரிவித்துள்ளது.
கடந்த ஜூன் மாதம் முதல் இதுவரை 7,000 மெட்ரிக் தொன் (700,000 பொதிகள்) அரிசித் தொகை நன்கொடையாக இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளதாக சீன தூதரகம் ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளது.