இலங்கை கரையோர மார்க்கத்தின் கொம்பனித்தெரு – கொள்ளுப்பிட்டி புகையிரத நிலையங்களுக்கு இடையே பாலம் ஒன்று பழுதடைந்துள்ளது.
இந்தப் பாலத்தின் திருத்தப் பணிகள் காரணமாக, கரையோர புகையிரத சேவைகள் தாமதமாகியுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்காரணமாக இரட்டை வழியாக இயங்கும் புகையிரதங்கள் கொழும்பு கோட்டை மற்றும் வெள்ளவத்தை புகையிரத நிலையங்களுக்கு இடையில் ஒற்றைப் பாதையில் பயணிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி, கரையோர மார்கத்திலிருந்து இருந்து பிரதான மார்க்கம் மற்றும் புத்தளம் பாதைக்கு பயணிக்கும் புகையிரதங்கள் தாமதமடையும் சாத்தியம் காணப்படுகின்றது.
வெள்ளவத்தைக்கும் கொழும்பு கோட்டைக்கும் இடையிலான தொடரூந்து பாதை தற்காலிகமாக மூடப்பட்டதால், கரையோர தொடரூந்து மார்க்கத்தில் இன்று 10 புகையிரத சேவைகளை ரத்து செய்ய ரயில்வே திணைக்களம் தீர்மானித்துள்ளது.
பாலத்தை சீரமைக்க குறைந்தது 5 நாட்களாகும் எனவும் குறித்த காலப்பகுதியில் வெள்ளவத்தை மற்றும் கொழும்பு கோட்டைக்கு இடையிலான புகையிரத சேவையில் தாமதம் ஏற்படும் எனவும் ரயில்வே திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.