நாட்டில் கட்டுப்படுத்தப்பட்ட பல தொற்று நோய்கள் மீண்டும் தலைதூக்கும் அபாயம் காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதனை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் எதிர்காலத்தில் கடுமையான சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்றும் சுகாதார அமைச்சின் பிரதி பணிப்பாளர் டாக்டர் ஹேமந்த ஹெரத் தெரிவித்துள்ளார்.
தொற்று நோய்கள் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
காசநோய் தொடர்பில் அதிகம் கவனம்
குறிப்பாக நாட்டில் பரவலாக காணப்பட பல தொற்று நோய்களை நாம் ஒழித்துள்ளோம். எம்மால் மலேரியா, அம்மை நோய்கள் மற்றும் தொழு நோய்கள் போன்றவை கட்டுப்படுத்தப்பட்டது.
இதேவேளை காசநோய் தொடர்பில் அதிகம் கவனம் செலுத்தப்படுவதில்லை என சுட்டிக்காட்டிய அவர், இதன் காரணமாக நோயை அடையாளம் காண்பதற்கு தாமதம் ஏற்படுகிறது.
எனவே இது போன்ற நோய்கள் தொடர்பில் நாம் அதிக கவனம் செலுத்த வேண்டும் எனவும் சுகாதார அமைச்சின் பிரதி பணிப்பாளர் டாக்டர் ஹேமந்த ஹெரத் கூறினார்.