நாளை (18) முதல் அமுலுக்கு வரும் வாகனப் பதிவுக் கட்டணத்தை திருத்தியமைக்கும் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, முதலில் பதிவு செய்யும் போது 1600 சிசி அல்லது 1600 சிசிக்கு குறைவான கார்களுக்கு செலுத்த வேண்டிய கட்டணம் 25,000 ரூபாவாகும்.
மேலும், 1600 சிசிக்கு அதிகமான 80 கிலோவோட் கார்களுக்கு பதிவு கட்டணமாக 40,000 ரூபாய் செலுத்த வேண்டும்.
மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வாகனங்களுக்கான பதிவு கட்டணம் 2,000 ரூபாவாகும்.
மோட்டார் நோயாளர் காவு வண்டி, மோட்டார் இறுதி ஊர்வல ஊர்திகளுக்கான பதிவு கட்டணம் 10,000 ரூபாவாகும்.
மோட்டார் சைக்கிள்களுக்கான பதிவுக் கட்டணம் 3,000 ரூபாவாகும்.
சிறப்பு நோக்கம் கொண்ட வாகனங்களுக்கு பதிவு கட்டணம் 30,000 ரூபாவாகும்.