நிதி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திலினி பிரியமாலி உள்ளிட்ட நால்வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
இதன்படி, சந்தேகநபர்களை எதிர்வரும் நவம்பர் மாதம் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திலினி பிரியமாலி, ஜானகி சிறிவர்தன, வண. பொரளை சிறிசுமண தேரர் மற்றும் இசுரு பண்டார ஆகியோரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.