மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் துணிச்சலுடன் எதையும் எதிர்கொண்டு காரிய சித்தி பெறுவீர்கள். குடும்ப உறவுகளுக்கு இடையே பரஸ்பர ஒற்றுமை மேலோங்கி காணப்படும். சுய தொழில் உள்ளவர்களுக்கு தர்ம சிந்தனை அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு கடினமான வேலையும் சுலபமாக முடியும். ஆரோக்கியம் மேம்படும்.
ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதையும் ஒன்றுக்கு இரண்டு முறை சிந்தித்து செயல்படுவது நல்லது. குடும்பத்தில் உள்ளவர்களை தேவையில்லாமல் வார்த்தைகளால் காயப்படுத்த வேண்டாம். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு மந்தமான போக்கு காணப்படும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் நேர்மையாக இருக்க உறுதி எடுக்க வாய்ப்பு உண்டு. ஆரோக்கியம் சீராகும்.
மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதையும் ஆர்வத்துடன் நோக்கக்கூடிய அமைப்பாக இருக்கிறது. புதிய முயற்சிகளில் அணுகூல பலன் கிட்டும். குடும்ப அமைதிக்கு குறை இருக்காது. சுய தமிழில் உள்ளவர்களுக்கு பொருளாதார முன்னேற்றம் சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு இழுப்பறியான வேலைகள் தொல்லைகளை கொடுக்கலாம்.
கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் ஆன்மீக நாட்டம் அதிகரித்து காணப்படும். குடும்பத்தில் பெரியவர்களை மதித்து நடப்பது நல்லது. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு தேவையில்லாத அலைச்சல் ஏற்படலாம். உத்தியோகத்தில் உள்ளவர்கள் மற்றவர்களுக்கு உதவி போய் பிரச்சனையை சிக்கிக் கொள்ள வாய்ப்புகள் உண்டு கவனம் தேவை.
சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் பல தடைகள் ஏற்பட்டாலும் வெற்றி நடை போடக்கூடிய வாய்ப்பாக இருக்கிறது. மனம் தளர விடாமல் இருப்பது நல்லது. குடும்பத்தில் குதூகலம் காணப்படும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத திருப்பங்கள் உருவாகலாம். உத்தியோகத்தில் உள்ளவர்கள் நயமாக பேசி எதையும் சாதித்துக் கொள்வீர்கள். ஆரோக்கியத்தையும் கவனியுங்கள்.
கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் ஏற்றம் நிறைந்த நல்ல நாளாக இருக்கப் போகிறது. கணவன் மனைவி இடையே விரிசல் விழாமல் இருக்க, விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு தேவையில்லாத வீண் பழிகள் ஏற்க வாய்ப்புகள் உண்டு என்பதனால் கவனமுடன் செயல்படுவது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வெளியிட பயணங்களில் கவனம் வேண்டும்.
துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சாதகமற்ற அமைப்பு என்பதால் வீண் பிரச்சனைகள் தலை தூக்கலாம். குடும்பத்தில் சிறு சிறு சலசலப்புகள் வந்து மறையும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை தேவை. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு ஒரு கதவு மூடினாலும் இன்னொரு கதவு திறக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் பண உதவி செய்வதாக யாருக்கும் வாக்கு தர வேண்டாம்.
விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு எந்த நாள் எதிர்பார்த்த உதவிகள் சரியான நேரத்தில் வந்து சேர வாய்ப்புகள் உண்டு. கணவன் மனைவிக்கு இடையே எதையும் மறைத்து பேசாமல் இருப்பது நல்லது. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு பண ரீதியான விஷயத்தில் கவனம் தேவை. பூர்வீக சொத்து பிரச்சனைகள் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளிடம் பாராட்டுதல் பெறும் வாய்ப்பு கிடைக்கும்.
தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் கல்கி எட்டியது வாழ்க்கை கிடைக்கவில்லையே என்று நினைக்க கூடிய நாளாக இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பழைய விஷயங்கள் நினைவுக்கு வர வாய்ப்புகள் உண்டு. விட்டு சென்ற உறவுகள் உங்களைத் தேடும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நேர்மறையான சிந்தனைகள் அதிகரித்து காணப்படும்.
மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் கொடுக்க வேண்டிய பாக்கிகளை கொடுத்து விடுவீர்கள். வெளியூர், வெளியீடு தொடர்பான விஷயங்களில் சாதக பலன் கிட்டும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு மகிழ்ச்சி நிறைந்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கப் போகிறது. உத்தியோகத்தில் உள்ளவர்கள் சக பணியாளர்களை பகைத்துக் கொள்ள வேண்டாம். ஆரோக்கிய பாதிப்புகளை அலட்சியம் செய்யாதீர்கள்.
கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய கை ஓங்கி இருக்கக்கூடிய இனி அமைப்பாக இருக்கிறது. குடும்பத்தில் உங்களை அலட்சியம் செய்தவர்கள் புரிந்து கொள்ள முயற்சி செய்வார்கள். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு புதிய வாய்ப்புகள் இல்லம் தேடி வரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு தேவையற்ற பிரச்சனைகளில் மாட்டிக் கொள்ள வாய்ப்புகள் உண்டு என்பதால் மௌனம் காப்பது நல்லது.
மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய திறமையை வெளிப்படுத்தக்கூடிய நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். கணவன் மனைவி உறவுக்கு இடையே ஒளிவு மறைவை வைத்துக் கொள்ள வேண்டாம். சுய தொழிலில் உள்ளவர்கள் பயணங்கள் மூலம் அலைச்சல் ஏற்படலாம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நிலவையில் இருந்த கடன் தொகை வசூல் ஆகும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும்.