கொழும்பு மெகசின் சிறைச்சாலையில் உள்ள நீர்தாங்கியில் வீழ்ந்து கைதி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத்தில் மாளிகாவத்தை மீரானியா வீதியைச் சேர்ந்த 56 வயதான ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சிறைச்சாலையில் உள்ள நீர்தாங்கியின் மீது அமர்ந்திருந்த குறித்த கைதி, அதனுள் தவறி வீழ்ந்து உயிரிழந்ததாக சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
போதைப்பொருள் குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு சுமார் ஒன்றரை மாதம் மகசின் சிறைச்சாலையில் தடுப்பிலிருந்த அவர், கடந்த 4 நாட்களாக உணவுத் தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தததாக பொலிஸார் தெரிவித்துள்ளது.