பொலன்னறுவை அரலகங்வில குடுஓயாவிலிருந்து நீர் கொண்டு செல்லும் மதகு ஒன்றில்7 மாதங்களே ஆன குட்டி யானை ஒன்று சிக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக வெஹெரகல வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
நேற்று காலை யானைக் கூட்டத்துடன் வயலில் சுற்றித் திரிந்த குட்டி யானை தவறி ஓடையில் விழுந்துள்ளது.
இந்நிலையில் பிரதேசவாசிகள் குட்டி யானையைக் காப்பாற்ற முயற்சி செய்த போதிலும், அது வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு மதகு ஒன்றில் சிக்கிக்கொண்டுள்ளது .
இதையடுத்து பிரதேசவாசிகளால் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, இலங்கை மகாவலி அதிகாரசபையின் விஜயபாகுபுர மகாவலி பிரதேச அலுவலக அதிகாரிகள் பலர், வனவிலங்கு அதிகாரிகளுடன் சம்பவ இடத்திற்குச் சென்று, யானையை மீட்க பல மணிநேரம் முயற்சித்த போதும், அது பயனின்றி சில மணித்தியாலங்களில் யானை உயிரிழந்துள்ளது.