மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எதிர்பார்க்கும் சில விஷயங்களை கால தாமதம் ஏற்படலாம் எனவே எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொள்வது நல்லது. தொழில்முறை போட்டிகள் மேலும் வலுவடையும் என்பதால் கவனமுடன் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சக பணியாளர்களுடன் இருந்து வந்த மனக்கசப்புகள் மாறும். குடும்ப ஒற்றுமையில் விரிசல் வரலாம் கவனம் தேவை.
ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் நினைத்தது நினைத்தபடி நடக்கும் என்பதால் மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு சிலர் எதிர்பாராத குறுக்கீடுகள் ஏற்படலாம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிடைப்பதில் சிக்கல்கள் வரும். குடும்பத்தில் இதுவரை இருந்து வந்த மந்த நிலை மாறி குதூகலம் பிறக்கும். ஆரோக்கியம் மேன்மை அடையும்.
மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் ஒன்று நினைக்க அது ஒன்று நடக்கும் எனவே எதையும் அதன் போக்கில் விடுவது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு புதிய நபர்களின் அறிமுகத்தால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நாக்கில் தான் சனி இருப்பார் எனவே பேச்சில் கவனமுடன் இருப்பது நல்லது. குடும்பத்தில் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்க்கவும்.
கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எதிர்பாராத திடீர் அதிர்ஷ்டம் வரக்கூடிய நல்ல அமைப்பாக அமையப் பெறப் போகிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு எடுத்த காரியங்களில் சாதக பலன் கிட்டும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பொருளாதார ரீதியான அமைப்பு சிறப்பாக இருப்பதால் நீங்கள் நினைத்ததை வாங்கும் யோகம் பெறுவீர்கள். குடும்பத்தில் இருக்கும் பிரச்சனையில் அவசரப்படாமல் சிந்தித்து முடிவெடுப்பது நல்லது.
சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் பலன் தரும் அதிர்ஷ்ட யோக அமைப்பாக இருப்பதால் நீங்கள் தொட்டதெல்லாம் துலங்கும். சுப காரியங்கள் விலகி எதிர்பார்த்த நன்மைகள் நடக்கப் போகிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு எடுத்த வேலையை கொடுத்த நேரத்தில் முடிக்கும் யோகம் உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்கள் உங்களை நம்புபவர்களுக்கு நாணயமாக இருப்பீர்கள். ஆரோக்கிய பிரச்சனைகளை அலட்சியம் செய்யாதீர்கள்.
கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் சாதகமற்ற அமைப்பாக இருப்பதால் சற்று பொறுமையுடன் இருப்பது நல்லது. பொறுத்தார் பூமி ஆள்வார் என்பது போல எது நடந்தாலும் நீங்கள் பொறுமையாக இருந்தால் உங்களுக்கு வெற்றி வாய்ப்புகள் நிச்சயம் கிட்டும். சுயதொழியை நீங்கள் எதிர்பார்க்கும் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் கவலை இல்லாமல் வேலையை மகிழ்ச்சியுடன் செய்து முடிப்பீர்கள்.
துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அனுகூலம் தரக்கூடிய அமைப்பாக இருக்கிறது. நீங்கள் எதிர்பார்த்தபடி கிடைக்க வேண்டிய விஷயங்கள் உங்களுக்கு கிடைக்கும். அரசு வழி காரியங்களில் வீண் அலைச்சல் ஏற்படலாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு தேவையற்ற எதிர்மறை சிந்தனை இழப்புகளை ஏற்படுத்தும் என்பதால் கவனமுடன் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சாதுரியமான அறிவுத்திறன் நற்பலன்களை கொடுக்கப் போகிறது.
விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் தடுமாற்றத்துடன் ஆரம்பிக்கக்கூடிய அமைப்பாக இருக்கிறது. எதிலும் படபடப்புடன் செயலாற்ற வேண்டாம். வேகத்தை விட விவேகம் கடைபிடிப்பது நல்லது. குடும்ப ஒற்றுமைக்கு குறைவிருக்காது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு அடுத்தவர்களுடைய ஆலோசனை கேட்டு முடிவு எடுப்பது நல்லதல்ல. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு திடீர் அதிர்ஷ்டம் வரலாம்.
தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிலும் ஆர்வத்துடன் செயல்பட கூடிய இனிய அமைப்பாக இருக்கிறது. வியாபாரத்தில் விருத்தி உண்டாகக்கூடிய இனி அமைப்பாக இருக்கிறது. புதிய தொழில் துவங்கும் என்னும் மேலோங்கி காணப்படலாம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்ப்புகள் அடங்கும் என்பதால் நீங்கள் உங்களுடைய கை ஓங்கி இருக்குமாறு பார்த்துக் கொள்வது நல்லது. குடும்பத்தில் புதிய சுபகாரிய பேச்சு வார்த்தைகள் நடக்கலாம்.
மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் மறக்க முடியாத நாளாக ஒரு சிலருக்கு அமையப் போகிறது. நீண்ட நாள் காண நினைத்த ஒரு நபரை நீங்கள் சந்திக்க வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பணவரத்து அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்ப்பாலினத்தவரால் நன்மைகள் நடக்கலாம். கணவன் மனைவி இடையே சிறு சிறு சண்டை சச்சரவுகள் அவ்வபோது தோன்றி மறையும். ஆரோக்கியத்தை கவனிப்பது நல்லது.
கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் உற்சாகத்துடன் காணக்கூடிய நல்ல அமைப்பாக இருக்கிறது. குடும்பத்தில் இதுவரை இருந்து வந்த குழப்பங்கள் தீரும். மூத்தவர்களை அனுசரித்து செல்லுங்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பெரிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் உற்றார், உறவினர்களிடம் கவனமாக பேசுவது நல்லது.
மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் வேண்டாம் என்று நினைத்த ஒரு விஷயம் நடக்க வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத இடமாற்றம் ஏற்படலாம். வீண் பகையை வளர்த்துக் கொள்ளாதீர்கள். கணவன் மனைவிக்கு இடையே இருந்து வந்த விரிசல் மறையும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேலதிகாரிகளிடம் பாராட்டுக்கள் பெறக்கூடிய வாய்ப்புகள் உண்டு. அங்கீகரிக்காமல் இருந்து வந்த உங்களுடைய திறமையை அங்கீகரிப்பதற்கான சூழ்நிலை காணப்படுகிறது.