மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிர்பாராத திடீர் திருப்பங்கள் நடக்கும். கணவன் மனைவிக்கு இடையே நடக்கும் வாக்குவாதங்களில் மூன்றாம் மனிதர்களை தலையிடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். சுய தொழில் செய்பவர்களுக்கு உயர்வு உண்டாகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு முயற்சி திருவினையாக்கும். ஆரோக்கியத்தில் அக்கறை கொள்ளுங்கள்.
ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் பல எதிர்ப்புகள் வருவதற்கு வாய்ப்புகள் உண்டு. தன் கையே தனக்கு உதவி என்பது போல மற்றவர்களை எதிர்பார்க்காமல் உங்களுடைய வேலைகளை நீங்களே பார்த்துக் கொள்வது நல்லது. சுய தொழிலில் ஏற்றம் காணலாம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மனதில் ஒரு விதமான பயம் காணப்படும். ஆரோக்கியம் சீராகும்.
மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அனுகூலம் தரும் அமைப்பாக இருக்கிறது. மன கவலைகள் நீங்கி வெற்றி காணக்கூடிய யோகம் உண்டு. சுப காரிய தடைகள் விலகும். சுயதொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு திடீர் அதிர்ஷ்ட யோகம் வரும். பணவரத்து சிறப்பாக இருக்கும் என்பதால் பொருளாதாரம் ஏற்றம் காணும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மௌனம் பிரச்சனைகளை தீர்க்கும்.
கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய வீண் கோபம் மற்றவர்களை காயப்படுத்தாமல் இருப்பதை பார்த்துக் கொள்ளுங்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு அனாவசிய செலவுகள் வர வாய்ப்புகள் உண்டு எனவே விழிப்புணர்வுடன் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உற்சாகம் தொற்றிக் கொள்ளும், இனிய வாய்ப்புகள் கிடைக்கும் நல்ல நாளாக இருக்க போகிறது.
சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உழைப்பே உயர்வை கொடுக்கக்கூடிய நாளாக அமைய இருக்கிறது. குடும்பத்தில் மூத்தவர்களை அனுசரித்து செல்லுங்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பண வரவு நீங்கள் எதிர்பார்த்தபடி அமையும். கொடுக்கல் வாங்கல் பிரச்சனையில் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்கள் சினம் தவிர்ப்பது நல்லது.
கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய சிந்தனை நேர்மையாக செயல்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. எதைப்பற்றிய கவலையும் இல்லாமல் வருவதைப் பார்த்துக் கொள்ளலாம் என்கிற மனோதிடம் உங்களுக்கு உருவாகும். சுய தொழிலில் இதுவரை இருந்து வந்த இழுப்பறியான விஷயங்கள் முடிவுக்கு வரும். உத்தியோகத்தில் வேலை பளு அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகளையும் உடனே கவனிப்பது நல்லது.
துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய மாற்றம் சிறப்பான பலன்களை கொடுக்கும். உங்கள் மனதில் இருந்த கேள்விகளுக்கான பதில் கிடைக்கக்கூடிய தருணங்கள் அமையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு நீண்ட கால நண்பர் ஒருவரை சந்திக்க கூடிய வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சோதனை மேல் சோதனை வரும் எதற்கும் தயாராக இருப்பது உத்தமம். ஆரோக்கியம் மேம்படும்.
விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சுகமான இனிய நாளாக அமையப் போகிறது. நீங்கள் நினைத்ததை நினைத்தபடி நடக்கும் வாய்ப்புகள் உண்டு. சுப காரியங்களில் தேவையற்ற அலைச்சல் ஏற்படலாம் எனவே முன்கூட்டியே திட்டமிட்டு செயல்படுவது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு உங்கள் முயற்சிக்கு உரிய பலன்கள் கிட்டும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உறுதியான மனப்பான்மை தேவை.
தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சிக்கல்கள் நிறைந்த நாளாக அமைய இருக்கிறது எனவே கவனமுடன் இருப்பது நல்லது. நீங்கள் நல்லதே செய்தாலும் அது தீமையில் முடிய கூடும் என்பதால் விழிப்புணர்வுடன் செயல்படுவது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த லாபம் கிட்டும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பொறுமை நற்பலன் கொடுக்கும். உடல் நலம் தேரும்.
மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிர்பார்ப்புகள் பூர்த்தி அடைவதில் இடையூறுகள் ஏற்படலாம் தேவையற்ற எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொள்ளுங்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு மறதியால் தேவையற்ற சிக்கல்கள் வரக்கூடும் என்பதால் கூடுதல் எச்சரிக்கையுடன் அவசியமாகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு ஊக்கத்துடன் செயல்படக்கூடிய சுறுசுறுப்பான நாளாக இருக்கப் போகிறது.
கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய முயற்சிகள் பலன் தராமல் போகலாம் எனவே மனதை தளர விடாமல் இருப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு சுகவீனம் ஏற்படலாம் தேவையான ஓய்வு எடுத்துக் கொள்வது அவசியமாகும். குடும்ப உறவுகளுக்கு இடையே வாக்குவாதங்களை தவிர்க்கவும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மகிழ்ச்சி நிறைந்த நல்ல நாளாக இருக்க போகிறது.
மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிலும் ஆர்வத்துடன் செயல்படக்கூடிய நல்ல நாளாக அமையப் போகிறது. நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருப்பீர்கள் ஆனாலும் பிரச்சனை உங்களைத் தேடி வரும் என்பதால் எச்சரிக்கை உணர்வு தேவை. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த இடங்களில் இருந்து உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு போட்டிகள் அதிகரிக்கும் என்பதால் கூடுதல் ஒத்துழைப்பு தேவை