இறக்குமதி செய்யப்பட்ட கச்சா எண்ணெய் கப்பல் ஒன்று 45 நாட்களுக்கும் மேலாக இலங்கை கடற்பரப்பில் நங்கூரமிடப்பட்டுள்ளதாக பெற்றோலிய பொது ஊழியர் சங்கத்தின் தலைவர் கலாநிதி அசோக ரன்வல தெரிவித்துள்ளார்.
குறித்த கப்பலுக்கான தாமதக் கட்டணமாக பெரும் தொகையை செலுத்த வேண்டியுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
டொலர்களை வீணடிக்க வேண்டாம் எனவும் நம் நாட்டில் டொலர்கள் இல்லாத நிலையில், தாமதக் கட்டணம் செலுத்தி கப்பலை நங்கூரமிடத் தேவையில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
குறித்த கச்சா எண்ணையின் தரத்தில் பிரச்சினை இருப்பதாவும் இது தொடர்பாக அதிகாரிகள் முடிவு எடுக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.