ரி20 உலக்கிண்ணப் போட்டித் தொடரின் தற்போது இடம்பெற்றுவரும் இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான போட்டியில் பங்களாதேஷ் அணிக்கு 185 என்ற வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாட இந்திய அணிக்கு அழைப்பு விடுத்தது.
அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 184 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.
அவ்வணி சார்பில் விராட் கோஹ்லி 64 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்றுக் கொண்டார்.
கேஎல் ராஹுல் 50 ஓட்டங்களையும், சூர்யகுமார் யாதவ் 30 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.
பந்து வீச்சில் ஹசான் மஹ்முத் 3 விக்கெட்டுக்களையும் மற்றும் சகிப் ஹல் ஹசன் 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.