மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நற்பலன்கள் தரும் இனிய நாளாக அமையப் போகிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்து இருக்கும் விஷயத்தில் சுப பலன்கள் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் தேவையற்ற குறுக்கு வழிகளை தவிர்த்து நேர்வழியில் பயணிப்பது நல்லது. ஆரோக்கியத்தில் அக்கறை கொள்ளுங்கள்.
ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிர்காலம் பற்றிய திட்டமிடல் மேலோங்கி காணப்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு நீங்கள் நினைத்ததை சாதித்து காட்டும் வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு கடமையில் கூடுதல் அக்கறை தேவை. குடும்ப பொறுப்புகள் அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு எனவே ஆயத்தமாகுங்கள்.
மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அனுகூலம் தரும் அமைப்பாக இருக்கிறது. நீங்கள் தொட்டதெல்லாம் துலங்கும் யோகம் உண்டு. குடும்பத்தில் இருந்து வந்த மனக்கசப்புகள் மாறும். கணவன் மனைவி இடையே புரிதல் உண்டாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் மேலதிகாரிகளை பகைத்துக் கொள்ள வேண்டாம். ஆரோக்கியம் மேம்படும்.
கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எதிர்பார்ப்பதை விட சிறப்பான நாளாக அமையப் போகிறது. இழுபறியாக இருந்த வேலைகள் உடனடியாக முடியும். நீண்ட நாள் பிரச்சனைகள் முடிவுக்கு வரும். சுப காரிய தடைகள் விலகி நினைத்ததை சாதிக்கும் யோகம் உண்டு. சுய தொழில் எதிர்பார்க்கும் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சக போட்டியாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும்.
சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய சிறு சிறு முயற்சிகளும் வெற்றி பலன்களை தரக்கூடியதாக அமைப்பு இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு நெடுந்தூர பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்புகள் உண்டு. பயணங்கள் மூலம் அனுகூல பலன் பெறலாம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத திடீர் மாற்றங்கள் நிகழும். நிதானத்தை கைவிட வேண்டாம்.
கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய பொறுப்புகள் அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. குடும்ப உறுப்பினர்கள் விஷயத்தில் அலட்சியம் காட்ட வேண்டாம். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு வாகன ரீதியான வீண் விரயங்கள் வரக்கூடும் எனவே பராமரிப்பை மேற்கொள்வது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்கள் வெளியிட பயணங்களில் பொழுது உடைமை மீது கவனம் தேவை. ஆரோக்கிய பாதிப்புகளை அலட்சியப்படுத்த வேண்டாம்.
துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய மனதில் இருக்கும் குழப்பங்கள் தீர்வதற்கு வாய்ப்புகள் உண்டு. சரியான பாதையை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறோமா? என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு நீங்கள் எதிர்பார்ப்பதில் லாபம் உயரக்கூடும். புதிய ஒப்பந்தங்கள் தேடி வரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு கவன சிதறல் ஏற்படலாம், பொறுப்புடன் இருப்பது நல்லது.
விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய சிந்தனைகள் எதிர்மறையாக சிந்திக்க வாய்ப்புகள் உண்டு. எதையும் போட்டு அலட்டிக் கொள்ளாமல் வருவது வரட்டும் என்று விட்டுவிடுங்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் முக்கிய முடிவுகளை எடுப்பதில் காலதாமதம் செய்வது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிடைப்பதில் இடையூறுகள் ஏற்படலாம்.
தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் ஏற்ற இறக்கமான சூழ்நிலை காணப்படும். எதிலும் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. பொருளாதார ரீதியான சிக்கல்களை திறம்பட சமாளித்து விடுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு தேவையற்ற வம்பு, வழக்குகள் வரக்கூடும் எனவே உங்களுக்கு சம்பந்தம் இல்லாத விஷயங்களில் தலையிட வேண்டாம்.
மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய மனதில் இருக்கும் இனம் புரியாத மகிழ்ச்சி அனுகூலமான பலன்களை கொடுக்கும். உற்றார் உறவினர்களின் ஆதரவு பெருகும். கணவன் மனைவிக்கு இடையே இருந்து வந்த பனிப்போர் மறையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பணப்புழக்கம் கணிசமாக உயரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலையில் மாற்று சிந்தனைகளை சிந்திப்பீர்கள்.
கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அதிர்ஷ்டம் தரும் யோகம் நிறைந்த நல்ல நாளாக இருக்கப் போகிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு நீங்கள் எதிர்பார்ப்பதை விட சிறப்பான லாபம் கிடைக்கும். குடும்பத்தில் பெரியவர்களின் பேச்சைக் கேட்டு நடப்பது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்கள் உங்களுடைய முன்கோபத்தால் தேவையற்ற இழப்புகளை சந்திக்க கூடும் எனவே பொறுமையுடன் இருப்பது நல்லது.
மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எடுக்கக்கூடிய முடிவுகளுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கப் போகிறது. பங்குதாரர்களுடன் இருந்து வந்த சிறு சிறு மன கசப்புகள் மாறும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு பொருளாதார ரீதியான முன்னேற்றம் சிறப்பாக அமையும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வருமானம் பெருகுவதில் இருந்து வந்த தடங்கல்கள் நீங்கும். பதவி உயர்வு கிடைப்பதில் சாதக பலன் கிடைக்கும்.