பொகவந்தலாவ நகருக்கு அருகாமையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொகவந்தலாவ நகருக்கு அருகாமையில் உள்ள கெசல்கமுவ ஓயாவில் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சடலம் ஒன்று ஆற்றில் மிதப்பதனை கண்டு நபர் ஒருவர் பொலிஸாருக்கு வழங்கிய தகவலினை அடுத்தே குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.
விசாரணை
இந்த நபர் எவ்வாறு இறந்தார் என்பது தொடர்பாக பல்வேறு கோணங்களில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
சடலம் மேலதிக விசாரணையினை தொடர்ந்து வைத்திய பரிசோதனைக்காக டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொகவந்தலா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.