யால பூங்காவில் வன விலங்குகளை துன்புறுத்துபவர்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்ய வனஜீவராசிகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது.
யால பூங்காவில் வன விலங்குகளை துன்புறுத்துபவர்களுக்கு எதிராக உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு வனஜீவராசிகள் பணிப்பாளர் நாயகத்திற்கு விவசாய, வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சர் மஹிந்த அமரவீர பணிப்புரை விடுத்துள்ளார்.
அதன்படி, அவ்வாறு செயற்பட்டவர்கள் தொடர்பான அனைத்து தகவல்களும், அவர்களின் அடையாள இலக்கங்கள், முகவரிகள் மற்றும் வாகன இலக்கங்கள் மற்றும் முறையற்ற நடத்தையை நிரூபிக்கக்கூடிய அனைத்து ஆதாரங்களும் வனஜீவராசிகள் திணைக்களத்திடம் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இவர்கள் அனைவருக்கும் எதிராக வழக்குத் தாக்கல் செய்ய தீர்மானிக்கப்பட்டதாக வனஜீவராசிகள் பணிப்பாளர் நாயகம் சந்தன சூரியபண்டார தெரிவித்துள்ளார்