மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் அன்பு அதிகரிக்கும். சுப காரியங்களில் அலைச்சல் ஏற்படலாம். உத்தியோகத்தில் உள்ளவர்கள் உரிமைகள் பறிக்கப்படலாம். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்கள் நிதானத்தை கையாளுவது நல்லது அவசரப்பட்டு வார்த்தைகளை விட்டு விட வேண்டாம்.
ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் இனிய நாளாக இருக்கப் போகிறது. கணவன் மனைவி இடையே இருக்கும் கருத்து வேறுபாடுகள் மறையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு நீங்கள் செய்யும் எந்த ஒரு முயற்சியும் வெற்றி வாய்ப்புகளை பெற்றுக் கொடுக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பண விஷயத்தில் கவனம் தேவை. முன்பின் தெரியாதவர்களின் அறிமுகத்தை தவிர்க்கவும்.
மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் தீட்டிய திட்டங்கள் தீட்டியபடி நிறைவேறும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த இடங்களில் இருந்து பணம் கிடைப்பதில் தடைகள் வரலாம். கணவன் மனைவி இடையே நடக்கும் பிரச்சனைகளை ஊதி பெரிதாகாமல் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு செய்யும் வேலைக்கு ஏற்ப ஊதியம் கிடைக்கும். பதவி உயர்வு போன்றவை ஏற்பட வாய்ப்புகள் உண்டு.
கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய துணிச்சலான செயல் தன்னம்பிக்கையை அதிகரிக்க செய்யும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு நீங்கள் எடுக்கக்கூடிய முக்கிய முடிவுகள் சாதகமாக அமைய இருக்கிறது. கணவன் மனைவி இடையே நடக்கும் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.
சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் மனதிற்கு பிடித்தவர்களை சந்திக்க வாய்ப்புகள் உண்டு. கணவன் மனைவி இடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் மறையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பழைய கடன்கள் தீரும் வாய்ப்பு உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சில சூட்சுமங்களை கற்றுக் கொள்ளக் கூடிய வாய்ப்புகள் கிடைக்கும். ஆரோக்கியம் மேம்படும்.
கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய விடாப்பிடியான முயற்சிகளுக்கு உரிய பலன் கிடைக்கக்கூடிய நல்ல நாளாக இருக்கப் போகிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் முன் கோபம் தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சில மன கசப்புகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு எனவே மூன்றாம் மனிதர்களின் பிரச்சனையில் மூக்கை நுழைக்க வேண்டாம்.
துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் விரும்பிய விஷயங்களை அடைவதற்கு வாய்ப்புகள் உண்டு. பொன், பொருள் சேரும் யோகம் ஒரு சிலருக்கு அமையும். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்கள் இழுபறியாக இருந்த வேலைகளையும் சேர்த்து செய்து முடிப்பீர்கள். கணவன் மனைவிக்கு இடையே விரிசல் விழாமல் இருக்க அனுசரித்து செல்லுங்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு கூடுதல் பொறுப்புகள் சுமக்க வேண்டி வரும்.
விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எதிர்பார்த்த விஷயங்களுக்கு தீர்வு கிடைக்கக்கூடிய நாளாக இருக்கப் போகிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு நீங்கள் சமூகத்தின் மீதான அக்கறையை அதிகரித்துக் கொள்வீர்கள். குலதெய்வ வழிபாடு மேற்கொள்வதற்கான சந்தர்ப்பங்கள் அமையும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மனசாட்சிப்படி செயல்படக்கூடிய நாளாக இருக்கப் போகிறது.
தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சாதகம் அற்ற அமைப்பு என்பதால் எதிலும் நிதானத்தை கையாளுவது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் முக்கிய முடிவுகளை எடுப்பதில் தயக்கம் காட்டுவீர்கள். தேவையற்ற கடன்கள் வாங்குவது தவிர்ப்பது உத்தமம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு தடைகளை தாண்டி முன்னேற கூடிய நாளாக இருக்கப் போகிறது. ஆரோக்கியரீதியாக பாதிப்புகளை உடனுக்குடன் கவனியுங்கள்.
மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் நினைத்தது நிறைவேற கூடிய நல்ல நாளாக இருக்கப் போகிறது. கணவன் மனைவி இடையே சிறு சிறு சண்டை சச்சரவைகள் வந்து மறையும். புதிய இடங்களுக்கு பயணம் மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படலாம். உத்தியோகத்தில் உள்ளவர்கள் பயணங்களில் கவனத்துடன் இருப்பது நல்லது.
கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய பொறுப்புகளை தட்டி கழிக்காமல் பொறுப்புடன் செயல்படுவது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் புண்ணிய காரியங்களில் ஈடுபடுவீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேலதிகாரிகள் உடைய ஆதரவு தேவை எனவே இணக்கத்துடன் செல்வது நல்லது. ஆரோக்கியத்தில் இருந்து வந்து தடைகள் அகலும்.
மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் தேவையற்ற சந்தேகங்களை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் இருக்கும் மூத்தவர்களை அனுசரித்து செல்லுங்கள். தொழில் மற்றும் வியாபார விருத்தி ஏற்படுவதற்கு புதிய யுத்திகளை கையாளுவது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்கள் தேவையில்லாமல் எவரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம். பொறுப்புகள் அதிகரிக்கும். ஆரோக்கியத்தை கவனியுங்கள்.