மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அதிர்ஷ்டம் நிறைந்த நாளாக இருக்கப் போகிறது. கணவன் மனைவிக்கு இடையே இருந்து வந்த சிறு சிறு சச்சரவுகள் மறையும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு கிடைக்க வேண்டிய உரிமைகள் கிடைப்பதில் தடைகள் ஏற்படலாம். சுய தொழிலில் நீங்கள் லாபம் காணக்கூடிய வாய்ப்புகள் அதிகம். உடல் நலத்தில் அக்கறை கொள்ளுங்கள்.
ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் செய்யக்கூடிய செயல்களுக்கு நேர் எதிராக பலன்கள் ஏற்படலாம் எனவே கவனமுடன் இருப்பது நல்லது. சுப காரியத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் மறையும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு அனுபவம் அதிகம் உண்டாகும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு லாபம் காண புதிய யுக்திகளை தெரிந்து வைத்திருப்பது நல்லது. ஆரோக்கியம் மேம்படும்.
மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் கவலைகள் மறக்கக் கூடிய இனிய நாளாக இருக்கப் போகிறது. தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். கணவன் மனைவிக்குள் இருக்கும் நெருக்கம் மேலும் கூடும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு புதிய வாய்ப்புகள் இல்லம் தேடி வரும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு வம்பு வழக்குகள் வர வாய்ப்புகள் உண்டு எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.
கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய கடமையிலிருந்து தவறாமல் இருப்பது நல்லது. குடும்பத்தில் இருக்கும் குழப்பங்கள் தீர ஒத்துழைப்பு கொடுப்பீர்கள். கணவன் மனைவி ஒற்றுமையில் குறை இருக்காது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேல் அதிகாரிகளிடம் இணக்கம் உண்டாகும். சுய தொழிலில் உள்ளவர்கள் தங்களுடைய நேரத்தை உபயோகமான முறையில் செலவிடுவது நல்லது.
சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய சிறிய முயற்சிகளும் பெரிய அளவில் பலன்களை கொடுக்க இருக்கிறது. கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் கருத்து வேறுபாடுகள் மறையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் புதிய நண்பர்களின் அறிமுகம் பெறுவீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்கள் தேவையற்ற வழிகளில் பணத்தை செலவிடாமல் இருப்பது உத்தமம்.
கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய விடா முயற்சிகள் வெற்றியை கொடுக்கக்கூடிய நல்ல நாளாக இருக்கப் போகிறது. தந்தை வழி உறவினர்கள் மூலம் ஆதாயம் காணும் யோகம் உண்டு. சுய தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் நல் மதிப்பு உண்டாகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயர் அதிகாரிகள் உடைய ஆதரவு கிடைக்கும். ஆரோக்கியத்தை கவனியுங்கள்.
துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் இனிய நாளாக இருக்கப் போகிறது. கணவன் மனைவி இடையே நடக்கும் போராட்டம் முடிவுக்கு வரும். சுப காரிய முயற்சிகளில் இருந்து வந்த மந்த நிலை மாறும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று எதையும் செய்ய வேண்டாம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நினைத்தது நடக்கும் நல்ல நாளாக இருக்கிறது.
விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் வீண் விரயங்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. தேவையற்ற செலவுகளை கட்டுப்படுத்துவது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு தொட்டதெல்லாம் வெற்றியாகும் யோகம் உண்டு. உங்களை எதிர்த்தவர்கள் பலரும் பின்வாங்குவார்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வேலையில் கூடுதல் கவனம் தேவை. ஆரோக்கியம் சீராகும்.
தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சாந்தமான நல்ல நாளாக அமையப் போகிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் ஆக்கத்துடன் செயல்படுவீர்கள். கணவன் மனைவி ஒற்றுமையில் விரிசல் விழ வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பாராட்டுகள் கிடைக்கக்கூடிய நல்ல நாளாக இருக்கிறது. ஆரோக்கிய ரீதியான பாதிப்புகளை அலட்சியப்படுத்தாமல் உடனுக்குடன் கவனிப்பது நல்லது.
மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நன்மைகள் நடக்கக்கூடிய நல்ல நாளாக இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு அமைதி உண்டாகும். கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் பிரச்சனைகள் படிப்படியாக குறையும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சக பணியாளர்களால் ஆதாயம் காணக்கூடிய யோகம் உண்டு. ஆரோக்கியத்தை கவனியுங்கள்.
கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய சிந்தனையில் நல்ல மாற்றங்கள் நிகழும். உங்களுடைய குழப்பங்கள் தீரக்கூடிய வாய்ப்புகள் உண்டு. கணவன் மனைவியுடைய அனுகூலமான பலன்கள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பணிவு தேவை. உங்களுடைய சொந்த முயற்சிகளுக்கு மற்றவர்களுடைய ஆதரவு கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு விடா முயற்சி தேவை.
மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் லாபம் அதிகரிக்க நல்ல வாய்ப்புகள் உண்டு. வெளியிட பயணங்கள் மூலம் அனுகூலமான பலன்களை பெறுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு வரவைக் காட்டிலும் செலவு அதிகரிக்கும் என்பதால் சிக்கனத்தை கையாளுவது நல்லது. புதிய நட்பு வட்டம் விரிவடையும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்து அளவிற்கு சலுகைகள் கிடைக்கும்.