ஐ.சி.சி உலகக் கிண்ண 2020 கிரிக்கட் போட்டித் தொடரின் முதல் சுற்றுப் போட்டியின் தீர்க்கமான போட்டியொன்று இன்று (20) இலங்கை அணிக்கும் நெதர்லாந்து அணிக்கும் இடையில் நடைபெறவுள்ளது.
அதன்படி, போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்றுள்ள இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.
அவுஸ்திரேலியாவின் ஜீலோங்கில் இலங்கை நேரப்படி காலை 9.30 மணிக்கு போட்டி ஆரம்பமாகவுள்ளது.
தற்போது நெதர்லாந்து அணி முதல் சுற்றின் “ஏ” குழுவின் கீழ் முன்னிலை பெற்றுள்ள நிலையில் இலங்கை அணி மூன்றாவது இடத்தில் உள்ளது.
அந்த பட்டியலில் நமீபிய அணி இரண்டாவது இடத்தில் உள்ளது.
இதன்படி சுப்பர் 12 போட்டிக்கு தகுதி பெற இலங்கை அணி இன்றைய போட்டியில் வெற்றி பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
எனினும் இலங்கை அணியின் பல வீரர்கள் காயம் காரணமாக உலகக் கிண்ண போட்டிகளில் இருந்து விலக வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
வேகப்பந்து வீச்சாளர்களான டில்ஷான் மதுசங்க, துஷ்மந்த சமீர மற்றும் தனுஷ்க குணதிலக ஆகியோர் இவ்வருட உலகக் கிண்ணத் தொடரில் இருந்து விலகியுள்ளனர்.
அதன்படி, பினுர பெர்னாண்டோ, கசுன் ராஜித மற்றும் அஷேன் பண்டார ஆகியோர் இலங்கை அணிக்கு அழைக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.